கட்டுகஸ்தோட்டவில் உள்ள கோஹகொட பகுதியில் இன்று (04.05) இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 28 வயது இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூடு இன்று அதிகாலை 2.30 மணியளவில் நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த நபர் கண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர் கண்டி தேசிய மருத்துவமனையில் துப்புரவு மேற்பார்வையாளராகப் பணிபுரிந்து வந்தவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும், சந்தேக நபர்களும் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூடு குறித்து கட்டுகஸ்தொட்ட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.