ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இந்திய நடிகரும் அரசியல்வாதியுமான சி. ஜோசப் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்ததோடு, 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அவரது வெற்றியை ஒரு “பெரும்” வெற்றி என்றும் குறிப்பிட்டு ‘X’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.
சவால்களைக் கடந்து மக்களுக்கு உறுதியான நன்மைகளை வழங்குவதற்கான வலிமையை விஜய்க்கும் அவரது குழுவினருக்கும் கிடைக்க வேண்டும் என அவர் வாழ்த்தியுள்ளார்.
மேலும், குறிப்பாக இரு நாட்டு குடிமக்களையும் பாதிக்கும் பிரச்சினைகளில், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே ஒரு வலுவான மற்றும் நேர்மறையான உறவு உருவாகும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
“உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்,” என்று விஜய்யின் அதிகாரப்பூர்வ கணக்கைக் குறிப்பிட்டு நமல் மேலும் தெரிவித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (TVK) மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், அவரது தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து இந்த வாழ்த்துச் செய்தியை நாமல் ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார்.