நேற்று (07.05) ஈரான் இலக்குகள் மீது அமெரிக்க சிறிய தாக்குதல்களை மேற்கொண்டதுடன் அவை “love tap” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
சிறிதாகக் குறைத்து காட்டியதுடன், அவை “ஒரு லவ் டாப்” மட்டுமே என குறிப்பிட்டார். மேலும், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் இன்னும் அமலில் இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.
ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்க கடற்படை கப்பல்களைச் சுற்றி மோதல்கள் ஏற்பட்டதாக வெளியான தகவல்களுக்கு பின்னர், ABC News-க்கு அளித்த பேட்டியில் டிரம்ப் இதனைத் தெரிவித்தார்.
“போர்நிறுத்தம் தொடர்ந்து அமலில் உள்ளது. அது நடைமுறையில் இருக்கிறது,” என டிரம்ப் கூறியதுடன், அண்மைய தாக்குதல் அமெரிக்க தாக்குதல்கள் “சிறிய எச்சரிக்கை நடவடிக்கை” மட்டுமே எனவும் விளக்கமளித்தார்.
இதற்கிடையில், United States Central Command (CENTCOM) வெளியிட்ட அறிக்கையில், ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்ற அமெரிக்க டெஸ்ட்ராயர் கப்பல்களை இலக்காகக் கொண்டு ஈரான் தாக்குதல் மேற்கொண்டதாகவும், அதற்கு பதிலளிக்கும் வகையில் “தற்காப்பு” நடவடிக்கையாக அமெரிக்க படைகள் ஈரான் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஈரான் மேற்கொண்ட தாக்குதல்கள் தடுக்கப்பட்டதாகவும், எந்த அமெரிக்க ராணுவ சொத்துகளுக்கும் சேதம் ஏற்படவில்லை என்றும் CENTCOM கூறியுள்ளது.
ஆனால், ஈரான் தரப்பு அமெரிக்கா போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது. மேலும், அமெரிக்க தாக்குதல்கள் ஹோர்முஸ் நீரிணை அருகிலுள்ள கப்பல்கள் மற்றும் பொதுமக்கள் பகுதிகளை இலக்காகக் கொண்டதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.