பிரசவத்தின்போது ஏற்பட்ட சிசு மரணங்கள் தொடர்பான அலட்சியம் காரணமாக, திருகோணமலை மாவட்ட பொது மருத்துவமனையின் சிரேஷ்ட மருத்துவர் ஒருவரை சுகாதார அமைச்சு இடைநீக்கம் செய்துள்ளது.
உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்கத் தவறியது மற்றும் பிரசவத்தின்போது பணியில் இல்லாதது உள்ளிட்ட கடுமையான கடமைத் தவறுகள் நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தைக் காரணம் காட்டி, ஏப்ரல் 9 திகதியன்று அரச மருத்துவ அலுவலர்கள் சங்கம் வேலைநிறுத்தத்தை அறிவித்ததைத் தொடர்ந்து இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டது. இடைநீக்கம் செய்யப்பட்ட மருத்துவர், அந்த மருத்துவமனையின் அரச மருத்துவ அலுவலர்கள் சங்கத்தின் தலைவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.