சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், குருநாகல், முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் கடுமையான மின்னல் அபாயம் குறித்து வானிலை ஆய்வு மையம் இன்று (11.05) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று (11.05) இரவு 11.30 மணி வரை அமலில் இருக்கும் வகையில், 16 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், 09 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் சில இடங்களில் கடுமையான மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், அதே நேரத்தில், இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக குறிப்பிட்ட பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.