சைபர் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், காலி, ஹிக்கடுவ மற்றும் மிதிகம பகுதிகளில் நடத்தப்பட்ட தனித்தனி சோதனைகளில், 173 இந்தியர்கள் மற்றும் 25 நேபாளியர்கள் உட்பட மொத்தம் 198 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.
தெற்கு மாகாணத்தின் பல இடங்களில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த நடவடிக்கைகளின்போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
சந்தேகிக்கப்படும் சைபர் குற்றச் செயல்கள் மற்றும் கைது செய்யப்பட்ட நபர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.