சீரற்ற காலநிலையால் பல வீடுகள் சேதம்!

இலங்கையில் தொடர்ச்சியாக நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக நாடு முழுவதும் வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

கடந்த மே 10ஆம் திகதி முதல் இன்று (16.05) வரை பதிவான தகவல்களின் அடிப்படையில், 141 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. மேலும், இரத்தினபுரி மாவட்டத்தில் ஒரு வீடு முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியான தகவல்களின் படி, அதிகளவான பாதிப்பு களுத்துறை மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.

தொடரும் மோசமான காலநிலை காரணமாக நாடு முழுவதும் 48 பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் 1,263 குடும்பங்களைச் சேர்ந்த 4,099 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply