கடலில் மூழ்கிய கொள்கலன்களை அகற்றும் பணிகள் ஆரம்பம்

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கடலில் தீ விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் இருந்து கொள்கலன்களை அகற்றும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.

இந்த பணிகளை இரு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு குறித்த கப்பல் நிறுவனம், வழங்கியுள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் தர்ஷனி லஹந்தபுர தெரிவித்துள்ளார்.

அதன்படி கடலுக்கு அடியில் சிதறி கிடக்கும் கொள்கலன்களை அகற்றும் பணிகள் அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், குறித்த அமெரிக்க நிறுவனம் தற்போது இலங்கை கடற்பரப்பில் தமது பணிகளை ஆரம்பித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதேநேரம், ஷhங்காய் சால்வேஜ் என்ற நிறுவனத்திற்கு கப்பல் இடிபாடுகளை அகற்றும் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்கள் இம்மாதம் 19ஆம் திகதிக்குள் கொழும்பு கடற்பரப்பிற்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் மேலும் கூறினார்.

அத்துடன், தீ விபத்து காரணமாக இலங்கைக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டுத் தொகை குறித்தும் திருமதி தர்ஷனி லஹந்தபுர விளக்கமளித்தார்.

கடலில் மூழ்கிய கொள்கலன்களை அகற்றும் பணிகள் ஆரம்பம்

Social Share

Leave a Reply