எஹெலியகொட பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கி ஒருவர் கொலை!

எஹெலியகொட வலவிட்டவத்த பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உயிரிழந்தவர் கெட்டஹெத்த பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் படி, மோட்டார் சைக்கிள்களில் வந்த குழுவொன்று குறித்த நபரை தாக்கியதையடுத்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தக் கொலைச் சம்பவத்தின் காரணம் மற்றும் அதனுடன் தொடர்புடையவர்களை கண்டறியும் நடவடிக்கையை பொலிஸ் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Social Share

Leave a Reply