தென்மேற்குப் பருவமழை ஆரம்பம்!

நாட்டின் மீது தென்மேற்குப் பருவமழை நிலைமை படிப்படியாக நிலவிவருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சில இடங்களில் 50 மி.மீ.க்கு மேற்பட்ட பலத்த மழை எதிர்பார்க்கப்படுகிறது.

வடக்கு, அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டையிலும் மழை தொடரும் நிலையில், பல பகுதிகளில் மணித்தியாலத்துக்கு 30–40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மின்னல் மற்றும் பலத்த காற்று பாதிப்புகளை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Social Share

Leave a Reply