எரிபொருள் கையிருப்பு தொடர்பில் புதிய அறிவிப்பு!

நாட்டில் ஓகஸ்ட் மாதம் வரை போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

நவம்பர் வரை தேவையான எரிபொருள் கொள்வனவுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அமெரிக்காவிலிருந்து 90,000 மெற்றிக் தொன் மசகு எண்ணெய் கப்பல் இம்மாதம் 28ம் திகதி வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாட்டில் தற்போது எரிபொருள் நுகர்வு குறைந்துள்ளதாகவும் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply