இறக்குமதி செய்யப்படும் மோட்டார் வாகனங்கள் மீது விதிக்கப்படும் சுங்க இறக்குமதி வரியில் தற்காலிகமாக 50% கூடுதல் கட்டணம் விதிப்பது தொடர்பான உத்தரவுகளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக இந்த வார அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் தொடரும் ஆயுத மோதல் சூழ்நிலை மற்றும் தேசியப் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் ஆகியவற்றின் விளைவாக இறக்குமதிச் செலவுகள் கணிசமாக அதிகரித்துள்ளதால், இந்தக் கூடுதல் கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.