இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் அறிவித்துள்ளனர்.
இதன்படி, புதிய கையிருப்புகள் சந்தைக்கு வெளியிடப்படும் நிலையில், 400 கிராம் பால் மா பொதியின் விலை 50 ரூபாவாலும், ஒரு கிலோகிராம் பால் மா பொதியின் விலை 125 ரூபாவாலும் உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.