சீரற்ற வானிலை காரணமாக திருப்பி அனுப்பப்பட்ட விமானங்கள்!

சீரற்ற வானிலை காரணமாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நோக்கி வந்த சில விமானங்கள் மாற்று விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

05 விமானங்கள் மத்தளை சர்வதேச விமான நிலையத்திற்கும், மேலும் 02 விமானங்கள் இந்தியாவின் கொச்சின் மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்களுக்கும் மாற்றி அனுப்பப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

கட்டார், ஷார்ஜா, அபுதாபி மற்றும் புதுடெல்லி உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்த விமானங்களே இவ்வாறு திசை மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply