அமெரிக்க வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டதாக கூறப்படும் 25 இலட்சம் அமெரிக்க டொலர் இணைய மோசடி பணத்தில், தற்போது வெறும் 200 டொலர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை நிதி அமைச்சின் கணினி அமைப்புடன் தொடர்புடைய இணையத் தாக்குதலுக்கு பின்னர், அரசுத் திறைசேரியிலிருந்து இந்தப் பணம் வெளிநாட்டு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டதாக விசாரணைகள் தெரியவந்தது.
காணாமல் போன பணத்தைத் தேடி கண்டறிய இலங்கை அதிகாரிகள் அமெரிக்க அதிகாரிகளின் உதவியையும் நாடியிருந்தனர். விசாரணைகளின் போது, பணத்தின் ஒரு பகுதி அமெரிக்காவின் டெலாவேர் மாநிலத்தில் உள்ள வங்கிக் கணக்கொன்றுக்கு சென்றிருந்ததாகவும், மீதிப்பணம் மற்றொரு மாநில வங்கியுடன் தொடர்புபடுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், டெலாவேர் வங்கிக் கணக்கு முழுமையாக காலியாக இருந்ததாகவும், மற்றொரு கணக்கில் வெறும் 200 அமெரிக்க டொலர் மட்டுமே மீதமிருந்ததாகவும் அமெரிக்க தரப்பு அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளது.
மீட்கப்பட்ட அந்த 200 டொலர் தொகையை மீண்டும் இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.