முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச பொலிஸ் நிலையத்தில் முன்னிலை!

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இன்று (25.05) தலங்கம பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகியுள்ளார்.

போர்வீரர்கள் நினைவு அஞ்சலி நிகழ்விற்கான ஒத்திகையை இடையூறு செய்ய முயற்சித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அவர் அழைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் தலங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply