இந்திய அரசிடமிருந்து 134 சிங்கிள் கப் வாகனங்கள் இலங்கை பொலிஸாரிடம் கையளிப்பு!

இந்திய அரசின் ரூ.300 மில்லியன் மானிய உதவியின் கீழ் வழங்கப்பட்ட 134 சிங்கிள் காப் வாகனங்கள் இன்று இலங்கை பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டன.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா வாகனங்களை அதிகாரப்பூர்வமாக கையளித்தார்.

இவ்வாகனங்கள் பொலிஸாரின் சேவை திறனை மேம்படுத்தவும், அவசர பதில் நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் இந்தியா – இலங்கை அபிவிருத்தி கூட்டாண்மையின் மற்றொரு முக்கிய முன்னேற்றமாகவும் கருதப்படுகிறது.

Social Share

Leave a Reply