பொருளாதார முகாமைத்துவம் தொடர்பில் பேசும்போது பேரினப் பொருளாதாரம் மற்றும் நுண்பொருளாதாரம் என்று இரண்டு பரிமாணங்கள் காணப்படுகின்றன. ஆனால் இன்று நாட்டில் இவை இரண்டில் எதுவும் முன்னெடுக்கப்பட்டபாடில்லை என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோரோடு தற்போதைய பொருளாதார நிலையால் அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
பேரனிப் பொருளாதாரம் என்பது வேலையிலாப் பிரச்சினையின் விகிதம், பணவீக்கம், வர்த்தக சமன்பாடு, கொடுப்பனவுச் சமன்பாடு, பொருளாதார வளர்ச்சி வேகம், வரவு செலவு துண்டு விழும் தொகை மற்றும் நாணய மாற்று விகிதம் ஆகியவற்றை உள்ளடக்கி காணப்படுகின்றன. பேரினப் பொருளாதாரம் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் எந்த அளவிற்கு வெற்றி பெற்றுள்ளது என்பது தொடர்பில் கேள்விகள் எழுந்து காணப்படுகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
நுண் பொருளாதார முகாமைத்துவத்தையும் இந்த அரசாங்கம் புறக்கணித்துள்ளது. தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் தொழில்முனைவோர் இதில் அடங்குவர். இவர்கள் நாட்டிற்கு செல்வத்தை உருவாக்குகின்றனர். தற்போதைய அரசாங்கம் நுண் பொருளாதார முகாமைத்துவத்தையும் புறக்கணித்துள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இந்த பிரச்சினைகளை கையாள பேரின மற்றும் நுண் பொருளாதார முகாமைத்துவம் குறித்து சிந்திக்க வேண்டும். இது தொடர்பான பிரச்சினைகளை எதிர்காலத்தில் மீண்டும் ஒருமுறை பாராளுமன்றத்தில் முன்வைப்பேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.
வலையொளி இணைப்பு-