எபோலா நோய் இருப்பதாக சந்தேகிக்கப்படும் உகாண்டா நாட்டு பெண் ஒருவர், இந்தியாவின் பெங்களூருவில் உள்ள ஒரு தொழில்நுட்ப மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நோய் உறுதி செய்யப்பட்டால், 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு தெற்காசிய நாட்டில் எபோலா நோயால் பாதிக்கப்பட்ட முதல் நபராக இப்பெண் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பால் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பொது சுகாதார அவசரநிலையாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த நோயின் எந்தவொரு பாதிப்பும் இந்தியாவில் பதிவாகவில்லை என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சர் தெரிவித்து, ஒரு நாளின் பின்னர் இந்தச் செய்தி வெளியாகியுள்ளது.
28 வயதான குறித்த உகாண்டா பெண்ணின் இரத்த மாதிரிகளின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.