சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் சிலருக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பொலிஸ் ஊடகப் பிரிவினால் இன்று (15/12) வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பொது சேவைகள் ஆணைக்குழுவின் அங்கீகாரத்துடன் இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இலங்கை பொலிஸ் கே9 பிரிவின் பணிப்பாளராக இருந்த A.S.B.C வெதமுல்ல பதுளை பொலிஸ் பிரிவுக்கான பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரான J.A.K ஜயசிங்க, மனித உரிமைகள் பிரிவில் இருந்து பண்டாரவளை பொலிஸ் பிரிவுக்கான பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இவர்களை தொடர்ந்து, பதுளை பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் I.W.G.R கந்தேவத்த, களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
