மே 30 மற்றும் 31 ஆகிய திகதிகளில் வரும் வெசாக் பௌர்ணமித் தினத்தை முன்னிட்டு, இலங்கை முழுவதும் உள்ள உரிமம் பெற்ற அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மே 29 ஆம் திகதி மாலை முதல் ஜூன் 1 ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்க வேண்டும் என்று கலால் வரித் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.
உரிம நிபந்தனைகளை மீறும் விற்பனை நிலையங்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சட்ட மீறல்கள் தொடர்பில் 1913 என்ற எண்ணிலோ அல்லது oicoptroom@excise.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரியிலோ புகாரளிக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.