அவுஸ்திரேலியாவை வென்று தொடரை கைப்பைப்பற்றியது பாகிஸ்தான்

லாகூரில் நடைபெற்ற அவுஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியான ஒருநாள் சர்வதேசப் போட்டியில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா, பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களின் கட்டுப்படுத்தப்பட்ட பந்துவீச்சுக்கு முகங்கொடுக்க முடியாமல் 42 ஓவர்களில் 157 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. ஜோஷ் இங்கிலிஸ் 65 ஓட்டங்கள் பெற்றதுடன், ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் பெரிய இணைப்பாட்டங்களை ஏற்படுத்தத் தவறினர்.

பாகிஸ்தான் சார்பில் அணித்தலைவர் ஷகின் ஷா அப்ரிடி அதிரடியான பந்துவீச்சை வெளிப்படுத்தி முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார். அவரது தாக்குதலான பந்துவீச்சே அவுஸ்திரேலிய அணியை குறைந்த ஓட்ட எண்ணிக்கைக்குள் கட்டுப்படுத்த உதவியது.

158 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய பாகிஸ்தான் அணி, நிதானமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி 4 விக்கெட்டுகள் மீதமிருக்க வெற்றியை உறுதிப்படுத்தியது. இதன்மூலம் சொந்த மண்ணில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது.

Social Share

Leave a Reply