இந்தியாவின் வரலாற்று சாதனை வெற்றி

இந்திய 🇮🇳 அணிக்கு அபார வெற்றி. ஹீரோவானர் மானவ் சுதர்.  #TeamIndia #bcci #ManavSuthar

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார ஆதிக்கத்தை வெளிப்படுத்தி, இன்னிங்ஸ் மற்றும் 300 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புதிய வரலாறு படைத்தது. இது இந்தியாவின் டெஸ்ட் வரலாற்றிலேயே மிகப்பெரிய வெற்றியாக பதிவானது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 8 விக்கெட்டுகளை இழந்து 564 ஓட்டங்களை குவித்த பின்னர் தனது துடுப்பாட்டத்தை நிறுத்தியது. இந்திய துடுப்பாட்ட வீரர்கள் ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்களை முழுமையாக ஆதிக்கம் செலுத்தினர். சுப்மன் கில் ஓட்டங்களையும் லோகேஷ் ராகுல் 100 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் மொஹமட் சலீம் 2 விக்கெட்களை கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 152 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. அறிமுக டெஸ்ட் போட்டியில் விளையாடிய இடதுகை சுழற்பந்து வீச்சாளர் மனவ் சுதார் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கான அடித்தளத்தை அமைத்தார்.

412 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் ஆப்கானிஸ்தான் மீண்டும் துடுப்பெடுத்தாட கட்டாயப்படுத்தப்பட்டது. இரண்டாவது இன்னிங்ஸிலும் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தியதால் ஆப்கானிஸ்தான் 112 ஓட்டங்களுக்கு சுருண்டது. வொஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளையும் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சிறப்பாக பந்துவீசி மொத்தமாக 07 விக்கெட்களை கைப்பற்றி 28 ஓட்டங்களை பெற்றதோடு 3 பிடிகளையும் எடுத்த மானவ் சுதார் போட்டி நாயகன் விருதை வென்றார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version