T20 தொடரை வெற்றியுடன் ஆரம்பித்த மேற்கிந்திய தீவுகள்

மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது T20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 7 விக்கெட்களினால் வெற்றி பெற்று மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

சபினா பார்க் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 147 ஓட்டங்களை பெற்றது. இதில் கமிந்து மென்டிஸ் 51(39) ஓட்டங்களையும், குஷல் மென்டிஸ் 36(23) ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ஜேசன் ஹோல்டர், ஷமர் ஜோசப் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், ரொஸ்டன் சேஸ் 1 விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

148 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் துடுப்பாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 19.2 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 149 ஓட்டங்களை பெற்றது. இதில் ஷெய் ஹோப் ஆட்டமிழக்கமால் 65(54) ஓட்டங்களையும், ப்ரண்டன் கிங் 37(22) ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 2 விக்கெட்களையும், எஷான் மாலிங்க 1 விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

Social Share

Leave a Reply