இந்தியா, இலங்கை 2 ஆம் டெஸ்ட் – இந்தியா ஆதிக்கம்

இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் இன்று (24.08) கொழும்பு SSC மைதானத்தில் நிறைவுக்கு வந்துள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய இந்தியா அணி 138 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 503 ஓட்டங்களை பெற்று தனது துடுப்பாட்டத்தை இடைநிறுத்தியது. இதில் தேவ்தத் படிக்கல் 117(193) ஓட்டங்களை பெற்று அவரது 2 ஆவது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்து தனது 3 ஆம் இடத்தை நிரந்தரமாக கைப்பற்றியுள்ளார். துருவ் ஜுரேல் ஆட்டமிழக்காமல் 115(197) ஓட்டங்களையும், ரிஷர்ப் பண்ட் 63(89) ஓட்டங்களையும், யஷஷ்வி ஜெய்ஸ்வால் 45(53) ஓட்டங்களையும், ரவீந்திர ஜடேஜா 43(83) ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் அசித்த பெர்னாண்டோ 4 விக்கெட்களையும், கேஷர நுவந்த, பிரபாத் ஜெயசூரிய ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பாடி வரும் இலங்கை அணி 3 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 8 ஓட்டங்களோடு காணப்படுகிறது. லஹிரு உதார 1 ஓட்டத்துடனும், பிரபாத் ஜெயசூரிய 2 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர். கமில் மிஷார 5 ஓட்டங்களுடன் மைதானத்தில் காணப்படுகின்றார்.

Social Share

Leave a Reply