இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டி இன்று (24.08) கொழும்பு SSC மைதானத்தில் நிறைவுக்கு வந்துள்ளது. இந்த போட்டி சமநிலையில் நிறைபெற்றது. இந்தியா அணி 1-0 என இந்த தொடரை கைப்பற்றியுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய இந்தியா அணி 138 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 503 ஓட்டங்களை பெற்று தனது துடுப்பாட்டத்தை இடைநிறுத்தியது. இதில் தேவ்தத் படிக்கல் 117(193) ஓட்டங்களை பெற்று அவரது 2 ஆவது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்து தனது 3 ஆம் இடத்தை நிரந்தரமாக கைப்பற்றியுள்ளார். துருவ் ஜுரேல் ஆட்டமிழக்காமல் 115(197) ஓட்டங்களையும், ரிஷர்ப் பண்ட் 63(89) ஓட்டங்களையும், யஷஷ்வி ஜெய்ஸ்வால் 45(53) ஓட்டங்களையும், ரவீந்திர ஜடேஜா 43(83) ஓட்டங்களையும் பெற்றனர்.
இலங்கை அணியின் பந்துவீச்சில் அசித்த பெர்னாண்டோ 4 விக்கெட்களையும், கேஷர நுவந்த, பிரபாத் ஜெயசூரிய ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி 89.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 290 ஓட்டங்களை பெற்றது. இதில் சொனால் தினுஷ 103(163) ஓட்டங்களை பெற்று அவரின் 2 ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். பசிந்து சூரியபண்டார 80(133) ஓட்டங்களையும், கமிந்து மென்டிஸ் 32(58) ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் ப்ரசித் கிருஷ்ணா, மானவ் சுதர் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும் சரண்ஸ் ஜெய்ன் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
Follow On முறையில் 2 ஆவது இன்னிங்சில் துடுப்பாடிய இலங்கை அணி 154 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 429 ஓட்டங்களை பெற்று தனது துடுப்பாட்டத்தை இடை நிறுத்தியதுடன் போட்டி சமநிலையில் நிறைவடைந்தது. இதில் சொனால் தினுஷ ஆட்டமிழக்காமல் 133(264) ஓட்டங்களையும், பசிந்து சூரியபண்டார 92(173) ஓட்டங்களையும், கமிந்து மென்டிஸ் 55(92) ஓட்டங்களையும், கேஷர நுவந்த 46(150) ஓட்டங்களையும், கமில் மிஷார 32(39) ஓட்டங்களையும், தனஞ்ஜய டி சில்வா 23(44) ஓட்டங்களையும், லஹிரு குமார 12(90) ஓட்டங்களையும் பெற்றனர். சொனால் தினுஷ மற்றும் கேஷர நுவந்த ஆகியோர் 112 ஓட்டங்களை இருவரும் இணைப்பாட்டமாக பகிர்ந்து போட்டியின் போக்கை மாற்றினார். லஹிரு குமார இறுதி நேரத்தில் தனது
விக்கெட்டை விழவிடாமல் சொனால் தினுஷவிற்கு உதவினார்.
பந்துவீச்சில் மானவ் சுதர், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்களை கைப்பற்றினர்.
இந்த போட்டியின் நாயகனாக சொனால் தினுஷ தெரிவு செய்யப்பட்டார்.
இந்த தொடரின் நாயகனாக தேவ்தட் படிக்கல் தெரிவு செய்யப்பட்டார்.