இலங்கை, பாகிஸ்தான் 3 ஆம் நாள் – இலங்கை அபாரம்

பாகிஸ்தான் மற்றும் இலங்கை இலங்கை அணிகளுக்கிடையில் முதலாவது டெஸ்ட் போட்டி 09 ஆம் திகதி(09.11) ராவல்பிண்டியில் ஆரம்பித்து நடைபெற்று வருகிறது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 106.3 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 434 ஓட்டங்களை பெற்ற நிலையில் தனது துடுப்பாட்டத்தை இடை நிறுத்தியது. இதில் சவுத் ஷகீல் 93 ஓட்டங்களையும், அறிமுகத்தை மேற்கொண்ட டையாப் ஆரிப் 57 ஓட்டங்களையும், அறிமுகத்தை மேற்கொண்ட அரபாத் மின்ஹாஸ் 52 ஓட்டங்களையும், அறிமுகத்தை மேற்கொண்ட மொஹமட் தாஹா 51 ஓட்டங்களையும், பாபர் அசாம் 50 ஓட்டங்களையும், கசி கோரி 48 ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் அசித்த பெர்னாண்டோ, டில்ஷான் மதுஷங்க ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், லஹிரு குமார, மிலான் ரத்நாயக்க, சொனால் தினுஷ ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பாடி வரும் இலங்கை அணி 102 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 404 என்ற நிலையில் துடுப்பாடி வருகின்றது. இதில் தனஞ்சய டி சில்வா 167 ஓட்டங்களையும், குஷல் மென்டிஸ் 117 ஓட்டங்களையும் பெற்ற நிலையில் ஆடுகளத்தில் காணப்படுகின்றனர். இவர்கள் இருவரும் தற்போது 249 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து இலங்கை அணியை மோசமான நிலையில் இருந்து மீட்டெடுத்தனர்.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் மொஹமட் அபாஸ் மற்றும் அறிமுகத்தை மேற்கொண்ட ஷகீப் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றியுள்ளனர்.

Social Share