‘நசீரை கண்டால் கூட்டி வாருங்கள்’ – சாணக்கியன்

பாராளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட் உடனான பகிரங்க விவாதத்திற்கு தான் தயார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட் நேற்று (14/12) விடுத்த பகிரங்க அழைப்பிற்கு பதில் வழங்கி அனுப்பப்பட்டுள்ள அறிக்கையிலேயே இரா.சாணக்கியன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அவர், “கண்டால் வர சொல்லுங்க, அவர கையோட விவாதத்திற்கு கூட்டி வாருங்கள். பாராளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட்டினை கண்டால் கூட்டி வாருங்கள், நான் விவாதத்துக்கு தயார். இவ் விவாதம் நேரலையில் ஒளிபரப்பப்பட வேண்டும்.

நான் பாராளுமன்றத்தில் கூறிய கருத்தில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை அது எமது மாகாண தமிழ் பேசும் மக்களுக்கு நன்றாகவே தெரியும்” என்றார்.

எந்தவொரு ஊடகமாக இருந்தாலும், குறித்த ஊடகம் ஏற்பாடு செய்யும் பகிரங்க விவாதத்தில் பங்கேற்பதற்கு தான் தயாராகவே இருப்பதாகவும் இரா.சாணக்கியன் தனது பதில் அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

‘நசீரை கண்டால் கூட்டி வாருங்கள்' - சாணக்கியன்

Social Share

Leave a Reply