கருத்தடை சர்ச்சை வைத்தியர் மீண்டும் பணியில்

குருநாளை வைத்தியசாலையில் கருத்தடை செய்தார் என குற்றம் சுமத்தப்பட்டு கட்டாய விடுமுறையில் வீட்டுக்கு அனுப்பப்பட்ட வைத்தியகலாநிதி ஷபி ஷிஹாப்டீன் மீண்டும் பணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
சுகாதர அமைச்சு கடிதம் மூலம் இந்த அறிவிப்பினை அவருக்கு வழங்கியுள்ளது.

சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க இந்த கடிதத்தை அனுப்பியுள்ளதுடன், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அவரது சம்பளத்தையும், நிலுவைகளையும் உடனடியாக வழங்குமாறு உத்தரவிட்டுள்ள அதேவேளை, சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்டதற்கான காரணத்தையும், குருநாகளை வைத்தியசாலையின் பணிப்பாளரிடம் கோரியுள்ளார்.

2019-2020 காலப்பகுதியில் கருத்தடை சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டார் என வைத்தியகலாநிதி ஷபி ஷிஹாப்டீனுக்கு எதிராக குருநாகளை வைத்தியசாலையில் பல பெண்கள் முறைப்பாடு செய்திருந்தனர். அதனை தொடர்ந்து, அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

குறித்த விடயம் பாரிய சர்ச்சையாக அந்த காலத்தில் ஏற்பட்டிருந்தது. தற்போது அவர் மீண்டும் பணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

விசாரணைகளின் போதும், ஊடகங்களினாலும்,பொது மக்களாலும் பெரியளவில் பாதிக்கபப்ட்ட குறித்த வைத்தியர் பொலிஸ் மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவுகளின் இரண்டு மாத கடுமையான விசாரணைகளின் பின்னர் ஆதாரங்கள் இல்லாமையினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

கருத்தடை சர்ச்சை வைத்தியர் மீண்டும் பணியில்

Social Share

Leave a Reply