திருகோணமலை – தம்பலகாமம் பொலிஸ் பிரிவில் போதைப்பொருள் தடுப்பு பிரிவில் கடமையாற்றி வந்த பொலிஸ் சார்ஜன் ஒருவர் நேற்றிரவு (16/12) திடீரென உயிரிழந்துள்ளார்.
முள்ளிப்பொத்தானை – 96ஆம் கட்டை பகுதியில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கடமைக்காக சென்ற போது, மயங்கி விழுந்துள்ள நிலையில் அவர் காணப்பட்டதாகவும் பின்னர் அவர் உயிரிழந்திருந்தமை உறுதி செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் கந்தளாய் – பேராறு பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய அச்சி மொஹம்மது பாரிஸ் எனவும் அவரது சடலம் கந்தளாய் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தம்பலகாமம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
(திருகோணமலை நிருபர்)