ஜோர்ஜியா தூதுவர் – சுற்றுலாத்துறை அமைச்சர் சந்திப்பு

சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் நோக்கில் இலங்கை மற்றும் ஜோர்ஜியா இடையே ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட தீர்மானமிக்கப்பட்டுள்ளது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் எதிர்வரும் மாதம் கைச்சாத்திடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கும் இலங்கைக்கான ஜோர்ஜியாவின் தூதுவர் Archil Dzuliashvill ஆகியோருக்கும் இடையில் உலக வர்த்தக மையத்தில் நேற்று (16/12) இடம்பெற்ற சந்திப்பின்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

இதன்போது, இலங்கையில் ஜோர்ஜியா சுற்றுலாப் பயணிகளுக்கு முழு ஆதரவை வழங்குவதாகவும், ஜோர்ஜியா, கஸகஸ்தான் மற்றும் அஸர்பைஜான் ஆகிய நாடுகளில் கூட்டு ஊக்குவிப்புத் திட்டத்தை செயல்படுத்த சுற்றுலாத்துறை அமைச்சர் தூதரிடம் பரிந்துரைத்துள்ளார்.

ஜோர்ஜியா தூதுவர் - சுற்றுலாத்துறை அமைச்சர் சந்திப்பு

Social Share

Leave a Reply