கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மயிலவௌ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முன்னால் இராணுவ வீரர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விபத்து நேற்று (17/12) இடம்பெற்றுள்ளது.
விபத்தில் 50 வயதுடைய இராணவ வீரர் ஒருவரே படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கோமரங்கடவல பகுதியிலிருந்து முச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த முன்னாள் அவர், மல்போறுவ பகுதியிலிருந்து டிமோ பட்டா ரக லொறியுடன் நேருக்கு நேர் மோதியதால் விபத்து நேர்ந்ததாகவும், விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதியை கைது செய்துள்ளதாகவும் விபத்து தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கோமரங்கடவல பொலிஸார் தெரிவித்தனர்.
(திருகோணமலை நிருபர்)
