அதிபர் ஆசிரியர்களின் கோரிக்கைகள் தொடர்பில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் ஜனவரி 22ஆம் திகதிக்கு முன்னர் நிறைவேற்றப்படாவிட்டால், மீண்டும் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படும் என இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் நேற்று (18/12) இடம்பெற்ற இலங்கை ஆசிரியர் சங்கத்தின் வட மாகாண அதிபர்கள் ஆசிரியர்களுடனான கலந்துரையாடலின் போது இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனை தெரிவித்தார்.
அத்துடன் சம்பள முரண்பாடு மற்றும் அதிபர் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் சுற்றறிக்கை தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் 6 மாத காலத்திற்குள் தீர்வு வழங்குவதற்கான குழு அமைக்கப்பட வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஜோசப் ஸ்டாலின் மேலும் தெரிவித்தார்.