1000/- வழங்கப்படாமைக்கு விசாரணை

பெருந்தோட்ட நிறுவனங்கள் சில நாளொன்றுக்கான ஆயிரம் ரூபா சம்பளத்தை இதுவரை வழங்காதமை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கு விசேட ஆணையாளர் தலைமையில் குழு ஒன்று நியமிக்கப்படவுள்ளதாக, தொழில்துறை அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் நேற்று (18/12) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அதுபற்றி கருத்து தெரிவித்த அமைச்சர், நாளொன்றுக்கான சம்பளம் ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என நீதிமன்றில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனினும் அதற்கெதிராக பெருந்தோட்ட நிறுவனங்கள் சில மேன்முறையீடு செய்துள்ளன.

ஆனாலும் குறித்த மேன்முறையீடு தொடர்பாக ஆயிரம் ரூபா சம்பளம் வழங்க வேண்டும் என்ற உத்தரவுக்கு நீதிமன்றினால் இதுவரை தடை விதிக்கப்படவில்லை.

அதற்கமைய குறித்த பெருந்தோட்ட நிறுவனங்களின் செயற்பாடுகளுக்கு எதிராக செய்யப்பட்டுள்ள முறைப்பாடுகள் உரிய வகையில் விசாரணை செய்யப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

1000/- வழங்கப்படாமைக்கு விசாரணை

Social Share

Leave a Reply