பல்கலைக்கழக தெரிவுக்கான விசேட அறிவித்தல்

பல்கலைக்கழக தெரிவுக்கான காத்திருப்பு கால இடைவெளியை குறைக்க தீர்மானித்துள்ளதாக கல்வியமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று (18/12) தெரிவித்துள்ளார்.

கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு பின்னர் பல்கலைக்கழகத் தெரிவுக்காக 10 மாதங்களுக்கு மேலாக காத்திருக்கும் இடைவெளியானது அதிகம் என்பதாலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் எதிர்வரும் வருடம் இடம்பெறவுள்ள கல்வி பொதுத்தராதர சாதாரணதர, உயர்தர மற்றும் புலமைப் பரிசில் பரீட்சை திகதிகளில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும் அவர் கூறினார்.

பல்கலைக்கழக தெரிவுக்கான விசேட அறிவித்தல்

Social Share

Leave a Reply