5 மாவட்டங்களில் தொழிற்சங்க நடவடிக்கைகள்

5 மாவட்டங்களில் உள்ள வைத்தியசாலைகளில் இன்று (20/12) தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சங்கத்தின் மத்திய குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் இதனை தெரிவித்தார்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதித்துவம் இல்லாமல் சுகாதார அமைச்சினால் 500 வைத்தியர்களுக்கான நியமனப் பட்டியல் வெளியிடப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

அதற்கமைய, நுவரெலியா,மன்னார், திருகோணமலை,இரத்தினபுரி மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் உள்ள வைத்தியசாலைகளில் இன்று காலை முதல் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

5 மாவட்டங்களில் தொழிற்சங்க நடவடிக்கைகள்

Social Share

Leave a Reply