லிட்ரோ நிறுவனத்திற்குரிய இரண்டு கப்பல்களில் உள்ள சமையல் எரிவாயுவின் மாதிரிகள் நேற்று (19/12) பெறப்பட்டுள்ளன.
சமையல் எரிவாயுவின் தரம் தொடர்பில் ஆராய்வதற்காக,இலங்கை தரநிர்ணய நிறுவனம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை ஆகியன குறித்த மாதிரிகளை பெற்றுக் கொண்டுள்ளன.
அதற்கமைய கெரவலப்பிட்டி கடற்பகுதியில் நங்கூரமிடப்பட்டுள்ள லிட்டோ நிறுவனத்திற்கு சொந்தமான இரண்டு கப்பல்களில் இருந்து இவ்வாறு மாதிரிகள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உள்நாட்டு சந்தையில் விற்பனை செய்யப்படும் 75 சதவீதமான சமையல் எரிவாயு கொள்கலன்கள் லிட்ரோ நிறுவனத்திற்குரியதாகும்.
குறித்த நிறுவனம் முன்னதாக இரண்டு கப்பல்களில் இறக்குமதி செய்த சமையல் எரிவாயு தரம் குறைந்தவை என ஆய்வில் தெரியவந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.