இலங்கையில் கொவிட் 19 தொற்று நோய்களில் புதிதாக பரவி வரும் வைரஸ் திரிபுகளை அடையாளம் காண உதவும் மரபணு பகுப்பாய்வு செயன்முறை குறித்து சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம்,வைத்திய அதிகாரி ஹேமந்த ஹேரத் விளக்கமளித்தார்.
இன்று (20/12) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறித்த மரபணு பகுப்பாய்வு செயன்முறை குறித்து கருத்து தெரிவித்தார்.
மரபணு பகுப்பாய்வு என்பது இலங்கையில் வைரஸின் புதிய திரிபுகளை அடையாளம் காண சுகாதாரத் துறையால் பயன்படுத்தப்படும் ஒரு முறையாகும்.
அதே செயன்முறையின் கீழே தான், டெல்டா கொவிட், அல்ஃபா மற்றும் ஒமிக்ரொன் போன்ற புதிய வைரஸ் திரிபுகள் நாட்டில் அடையாளம் காணப்பட்டதாக அவர் கூறினார்.