வினையாக வந்த தூண்டில்

தோட்டக்காணி கிணற்றில் தூண்டில் போட்டு மீன் பிடித்த 8 வயது சிறுவன் ஒருவன் கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

பருத்தித்துறை – திக்கம் நாச்சிமார் கோவிலடியில் நேற்று (20/12) பிற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் நியந்தன் ரித்திக்குமார் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளான்.

பெற்றோர் தொழிலுக்குச் சென்றிருந்த நிலையில், குறித்த சிறுவன் தனது சகோதரியுடன் தோட்டக்காணியில் உள்ள கிணற்றில் தூண்டில் போட்டு மீன்பிடித்த போது, கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளான்.

சம்பவ இடத்திற்கு விரைந்த உறவினர்கள், கிணற்றில் சிறுவனைத் தேடிய போது, சிறுவன் சடலமாக மீட்கப்பட்டதாக மரண விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி சிவராசா, சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு பணித்துள்ளார்.

(யாழ் நிருபர்)

வினையாக வந்த தூண்டில்

Social Share

Leave a Reply