வெப் சீரிசாக வரவுள்ள “பொன்னியின் செல்வன்”

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் பலரது மனங்களிலும் இடம் பிடித்துள்ள ஒரு வரலாற்று நூல் ஆகும். தற்போது பொன்னியின் செல்வன் கதையின் பாகம் ஒன்றினை இயக்குநர் மனிரத்தினம் நடிர்களான ஜெயம்ரவி, கார்த்தி, விக்ரம், பார்த்தீபன், ஐஸ்வர்யாராய், த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் திரைப்படமாக இயக்கி வருகிறார்.

அந்தவகையில் இயக்குனரான நடிகர் ரஜனியின் மகள் சௌந்தர்யா ராஜேஸ் பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டு “புதுவெள்ளம்” பொன்னியின் செல்வன் சீசன்-1 எனும் வெப் சீரிஸை தயாரிக்கவுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதுடன் இது தொடர்பான அடுத்த கட்டப் பணிகளை தனது சிறந்த திறமையான குழுவுடன் ஆரம்பிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Social Share

Leave a Reply