காதல், பாய்ஸ், எம்டன்மகன், வெயில், வானம் திரைப்படங்கள் மூலம் தனது ஆரம்பகால தமிழ் சினிமாவிலேயே இரசனையான நடிப்பில் இரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தார் நடிகர் பரத். அதன் பின்னர் அவருக்கான சினிமா வாய்ப்புகள் தமிழில் குறைந்துவிட தெலுங்கு மலையாளம், ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்திருந்தார்.
சினிமா தவிர உடல் கட்டுக்கோப்பினையும் பேணிவரும் இவர் கடந்த 2020ம் ஆண்டு “டைம் என்ன பாஸ்” எனும் வெப் சீரிஸிலும் நடித்துள்ளார்.

2013ம் ஆண்டில் ஜெஸ்லியைத் திருமணம் செய்து கொண்ட இவருக்கு கடந்த 2018ம் ஆண்டு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தனர். தனது குழந்தைகளின் புகைப்படங்களை பகிர்ந்து மகிழ்ச்சி கொண்டாடிய பரத் தற்போது நீண்ட இடைவெளியின் பின்னர் தனது மகன்களின் புகைப்படத்தினை விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டப் புகைப்படமாக பகிர்ந்துள்ளார்.