‘புத்திகெட்ட மனிதர் எல்லாம்’

இலங்கையில் தயாரிக்கப்பட்ட ‘புத்திகெட்ட மனிதர் எல்லாம்’ திரைப்படம் நேற்று (25/12) முதல் யாழ்ப்பாணம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

ராஜ் சிவராஜின் இயக்கத்தில் ப்ளாக்போர்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு பூவன் மதீஷன் இசையமைத்துள்ளார்.

இதில் பூவன் மீடியா மற்றும் பெட்ரோல் செட் ஆகிய யூடியூப் தளங்களின் மூலம் பிரபலமான நடிகர்கள் நடித்துள்ளனர்.

இந்தப் படம் நேற்று முதல் இலங்கையிலுள்ள யாழ் திரையரங்குகளில் திரையிடப்படுள்ள நிலையில், அதற்கு விளையாட்டுத்துறை இராஜாங்க அமைச்சர் நாமல் ராஜபக்ஷ வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

“தம்பி ராஜ் சிவராஜின் இயக்கத்தில் நம் நாட்டில் வெளிவந்திருக்கும் புத்தி கெட்ட மனிதரெல்லாம் திரைப்படத்துக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பு மகிழ்சியளிக்கிறது. ‘பூவன் மீடியா’ குழுவுக்கும் அதனை சார்ந்தோர் அனைவருக்கும் வாழ்த்துகள்” என அவர் தனது வாழ்த்துப் செய்தியை பகிர்ந்து கொண்டுள்ளார்.

பூவன் மீடியா தயாரிப்பில் உருவான இத்திரைப்படம் முழுக்க யாழ் இளைஞர் குழாத்தின் முக்கிய பங்களிப்பில் உருவாகியுள்ளது.

இலங்கையில் இதுவரை உருவாக்கப்பட்டுள்ள திரைப்படங்கள் மற்றும் குறும்திரைப்படங்கள் ஏராளமான பாராட்டுக்களையும், சில விருதுகள், கெளரவிப்புக்களை பெற்றிருந்தாலும் வர்த்தக ரீதியாக அவை பெரும்பாலும் வரவேற்பை பெறுவதில்லை.

இதனாலேயே இலங்கையில் உருவாகும் திரைப்படங்கள் தயாரிப்பு குழுக்களிடையே நல்ல வரவேற்பை பெறாமல் சிறந்த பல வாய்ப்புகளை இழக்கின்றன.

ஆனால் புத்தி கெட்ட மனிதரெல்லாம் என்ற இந்த திரைப்படத்தின் முக்கிய வெற்றி யாதெனில், வர்த்தக ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இது இலங்கையில் இதுவரை உருவாக்கப்பட்டுள்ள திரைப்படங்களில் மிக முக்கிய சாதனை ஒன்றாகும்.ஒரு திரைப்படம் வெற்றி பெறுவது, அதன் வசூல் நிலையை வைத்தே.

அந்தவகையில் இத்திரைப்படத்திற்கு மக்களிடையே என்றுமில்லாத புதியதொரு வரவேற்பு கிடைக்கப் பெற்றுள்ளதுடன், யாழில் வசூல் வேட்டை ஆரம்பமாகியுள்ளது.

இதன் எதிரொலியாக இலங்கையின் ஏனைய மாவட்டங்களிலும் திரையரங்குகளில் ’புத்தி கெட்ட மனிதரெல்லாம்’ திரைப்படம் திரையிடப்பட வேண்டும் என்ற ஆவல் எழுந்துள்ளது.

மேலுமொரு முக்கிய அம்சம் யாதெனில், ஆரம்பத்தில் வெளியான திரைப்படங்களில் விளம்பரப்படுத்தல்களில் இருந்த சரிவு நிலை இத்திரைப்படத்தில் இல்லை.

பூவன் மீடியா இளைஞர்களின் திறமையால் ஆரம்பத்திலேயே விளம்பரப்படுத்தல்களில் கையாண்ட உத்திகள் காரணமாக இரசிகர்களிடையே அதீத ஆர்வத்தை தூண்டிவிட்டது.

சரியான மற்றும் முறையான உத்திகளுடன் கையாண்ட விளம்பரப்படுத்தல்களினால் படத்தின் வெற்றியானது, வசூல் ரீதியாகவும் சிறந்த கதைக்கள ரீதியாகவும் உயர்ந்த இடத்தை பிடித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

பூவன் மீடியா, எங்க பெட்டியில்களின் இந்த புதிய சாதனைக்கும் மேலும் மேலும் பல்வேறு சாதனைகளை அவர்கள் நிலைநாட்டுவதற்கும் வாழ்த்துக்கள்.

‘புத்திகெட்ட மனிதர் எல்லாம்'
‘புத்திகெட்ட மனிதர் எல்லாம்'
‘புத்திகெட்ட மனிதர் எல்லாம்'
‘புத்திகெட்ட மனிதர் எல்லாம்'

Social Share

Leave a Reply