‘எதிர்வரும் வருடம் கிராமிய அபிவிருத்தி பிரதான இலக்கு’

கிராமிய அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு எதிர்வரும் வருடம் 85,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்படும் என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட முழுப் பணத்தையும் வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கு செலவிட வேண்டும் என அரசாங்கத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

அங்குனகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் நேற்று (25/12) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது, வரவு – செலவு திட்டத்தின் கீழ் கிராமிய அபிவிருத்தி நிதி ஒதுக்கீடு தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே இதனை கூறினார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், “வேலையற்ற மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் பொருளாதார நிலையை உயர்த்துவதற்காக 100,000 வேலை வாய்ப்புகளை வழங்கும் வேலைத்திட்டத்தை ஜனாதிபதி ஆரம்பித்துள்ளார். இன்று அவ்வாறானவர்களுக்கே நியமனங்கள் வழங்கப்படுகின்றன.

மக்களின் வாழ்வாதார அபிவிருத்தியை மேம்படுத்துவதே அரசாங்கம் என்ற வகையில் எமது பிரதான நோக்கமாகும்.

இதற்கு இறுதியில், இந்த வருட வரவு – செலவுத் திட்டத்தில் பிரதேச அபிவிருத்திக்காக 85,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இந்த பணம் அனைத்தும் மக்களின் வாழ்வாதார அபிவிருத்திக்காக செலவிடப்படுகிறது” என்றார்.

இதேவேளை, அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்தவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

‘எதிர்வரும் வருடம் கிராமிய அபிவிருத்தி பிரதான இலக்கு'

Social Share

Leave a Reply