பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பு?

அண்மைக்காலமாக எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதை அடுத்து, குறைந்தபட்ச பேருந்து கட்டணத்தை 16 ரூபாவாக அதிகரிக்க போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது.

அதன்படி, தற்போது நடைமுறையிலுள்ள குறைந்தபட்ச பேருந்து கட்டணமான 14 ரூபாவை மேலும் இரண்டு ரூபாவால் அதிகரித்து 16 ரூபாவாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பேருந்து கட்டண திருத்தம் நாளை மறுதினத்திற்குள் (29/12) அறிவிக்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அனைத்து செலவினங்களையும் கருத்தில் கொண்டு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு பேருந்து கட்டண திருத்தத்தை மேற்கொள்ளும் என மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பு?

Social Share

Leave a Reply