யூரியா உள்ளிட்ட இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்கு விண்ணப்பித்திருந்த நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தேசிய உர செயலகத்தின் பணிப்பாளர் சந்தன லொகுஹேவகே இதனை தெரிவித்துள்ளார்.
எனினும் இரசாயன உர தட்டுப்பாடு காரணமாக விவசாயச் செய்கை தோல்வியடைந்துள்ளதாகவும், சேதன உரங்களை காட்டிலும் இரசாயன உரங்களில் விளைச்சல் அதிகமாக பெறப்படுவதாகவும் விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.