சீன வெளிவிவகார அமைச்சர் வேன் வீ உள்ளிட்ட தூதுக்குழுவினர் இலங்கைக்கு வருகை தரவள்ளனர்.
எதிர்வரும் ஜனவரி மாதம் 9ஆம் திகதி இவர்கள் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில், இலங்கைக்கு வருகை தந்திருந்த சீன உரக் கப்பல் விவகாரம் தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வரும் நிலையிலும், திருகோணமலை எண்ணெய் தாங்கி தொடர்பான இந்தியாவுடனான கூட்டு அபிவிருத்தி ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வரும் பின்னணியிலும் சீன வெளிவிவகார அமைச்சரின் இந்த விஜயம் அமைந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.