இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை உடன் அமுலாகும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய ஒரு கிலோகிராம் பால்மாவை 150 ரூபாவாலும், 400 கிராம் பால்மாவை 60 ரூபாவாலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மாவின் புதிய விலை 1,345 ரூபாவாகவும், 400 கிராம் பால்மாவின் புதிய விலை 540 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படும் என நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.