புகையிலைசார் பொருள் கொள்வனவுக்கான வயதெல்லையில் மாற்றம்

புகையிலை சார்ந்த பொருட்களை விற்பனை செய்தல், கொள்வனவு செய்தல் ஆகியவற்றுக்கான குறைந்தபட்ச வயதெல்லையானது, எதிர்வரும் வருடம் முதல், 21 இலிருந்து 24ஆக அதிகரிக்கப்படும் என புகையிலை மற்றும் மதுபானங்கள் மீதான தேசிய அதிகார சபையின் தலைவர் கலாநிதி சமாதி ராஜபக்ஷ தெரிவித்தார்.

புகையிலை மற்றும் மதுபானங்கள் மீதான தேசிய அதிகாரசபை சட்டத்தை 2022ஆம் ஆண்டு திருத்துவதற்கு தீர்மானித்துள்ள நிலையில், குறித்த மாற்றங்கள் நடைமுறைக்கு வரும் என அவர் ஊடகங்களுக்கு நேற்று (30/12) தெரிவித்தார்.

மேலும் சமூக ஊடகங்கள் உட்பட இணையத்தில் பரவி வரும் புகையிலை பொருட்கள் தொடர்பான அனைத்து விளம்பரங்களையும் நீக்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

புகையிலைசார் பொருள் கொள்வனவுக்கான வயதெல்லையில் மாற்றம்

Social Share

Leave a Reply