மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலிஹ் மற்றும் முதல் பெண்மணி ஃபஸ்னா அஹமட் ஆகியோர் நான்கு நாள் உத்தியோகபூர்வமற்ற விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இந்நிலையில், இவர்கள் 2 ஜனவரி ஆம் திகதியன்று தங்கள் முடிவில் மாலைத்தீவுக்குத் திரும்புவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து மாலைதீவு ஜனாதிபதி, இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து சந்தித்து மரியாதை செலுத்தியதடன், கொவிட்-19 தொற்றுநோய் மற்றும் இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர்.