மதுபானங்களுக்கான விசேட முத்திரை

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மதுபானங்களுக்கு மதுவரி திணைக்களம் பாதுகாப்பு முத்திரையை அறிமுகப்படுத்தியுள்ளதாக திணைக்கள ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

அதற்கமைய எதிர்வரும் 3ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதத்துக்குள் நாடு முழுவதும் உள்ள முழு சந்தைகளில், விற்பனை செய்யப்படும் சகல மதுபான கையிருப்புகளிலும் இந்த பாதுகாப்பு முத்திரை இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படும் மதுபானங்கள் உள்ளூர் சந்தைக்குள் வருவதை தடுக்க இந்த பாதுகாப்பான முத்திரை முறையை அறிமுகப்படுத்த மதுவரி திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மதுபானங்களுக்கான விசேட முத்திரை

Social Share

Leave a Reply